செருப்பு

நுண்கதை

யாரும் திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிடுவார்கள், பின்னால் ரமேசு வருகிறானென்று. அவனது சைக்கிளில் பெல்லே கிடையாது. பெடலிலிருந்து வரும் சத்தமே  முன்னால் செல்பவர்களை விலக்கிவிடும். சமையலில் மீந்த எண்ணெய்யை விட்டால் ஒசை வராது என்று கூறினார்கள். ஆனால் வீட்டில் பூரி செய்ததே இல்லை. தினமும் பிள்ளையாரைப் பார்க்க கோவிலுக்கு வந்துவிடுவான். இருப்பினும் அவனைப் பார்க்கத்தான் அவர் வருவதேயில்லை. மிதிவண்டியுடன் போட்டி போடும் செருப்பை அணிந்திருந்தான். அது தன் வெள்ளை நிறத்தை இழந்து வெகு நாட்களாகிறது. பின்புற ஓரத்திலிருந்து மூன்றாம்பிறை […]

வாசிப்பு

நுண்கதை

எதிர்பார்த்தது போலவே ஜன்னலோர சீட்டு கிடைத்தது. எதிரில் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்தாள். கையில் பெரியதொரு தலையணைப் புத்தகம்  வைத்திருந்தாள். பாதி முடிக்கப்பட்டிருந்தது. ஏதோவொரு கிராமத்தின் மத்தியில் தொடர்வண்டி நின்றது. அடுத்திருந்த நடைபாதையில் இரண்டு பெண்கள் முக்காடிட்டு உட்காரந்திருந்தார்கள். ஆண்கள் குத்துக்காலிட்டிருந்தார்கள். வடக்கிலிருந்து வந்தவர்களாக இருக்கும். பயணம் தொடர்ந்தது. புதிய பாலமொன்றைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தாண்டியதும் பெருநகரச் சந்திப்பின் பிளாட்பாரத்திற்குள் வண்டி நுழைந்தது. டீ, காபி, ரயில்நிலைய அறிவிப்பாளினியின் “வண்டியெண் 6032” எதுவும் அவள் காதில் விழவில்லை. […]

திருடன்

நுண்கதை

அண்ணாச்சி கடையில் அதைப் பார்த்ததும் வாங்கியே ஆகவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டான். அம்மா வைக்கும் பொட்டின் நிறத்தில் இருந்தது அந்தக் கிரிக்கெட் பால். தங்க எழுத்துக்களால் அதன் மீது எழுதப்பட்டிருந்தது. “ஏலே, என்னத்தப்  பாக்கற” என்ற கடைக்காரரிடம், “ஒண்ணுமில்ல” என்று கூறி நகர்ந்தான். இரவு முழுவதும் தூக்கமில்லை. அப்பாவிடம் கேட்டால் வாங்கிக்கொடுத்துவிடுவார். ஆனால் நிறையக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மறுநாள் பள்ளிக்குச் செல்லும்முன் அங்கே சென்றவன் உள்ளே யாரிருக்கிறார்கள் என எட்டிப்பார்த்தான். நல்வாய்ப்பாக இம்முறை கடைப்பையன் இருந்தான். “ஏனுங்ணா, அதென்ன […]

இறகு

நுண்கதை

தந்தையும் அவனும் நடந்து கொண்டிருந்தார்கள். பாலத்தின் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பலூன் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தார். சிவந்த நிறம். உள்ளே நீல வர்ண விளக்கொன்று மிளிர்ந்தது. தென்றலின் தாலாட்டிற்கு அசைந்தாடிக்கொண்டு வந்தது. புள்ளினங்கள் வீடடையத் திரும்பிக்கொண்டிருந்தன. பருந்தொன்று ஆகாயத்தில் மிதந்துக்கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் கூட்டமாக வட்டமடித்துக்கொண்டிருந்தன. அப்பாவிடம் அவற்றைக் காண்பித்தவன், “அதெல்லாம் என்ன பண்ணுது!” “பறக்குது” “எப்படி?” கைகளை மேலும் கீழுமாக ஆட்டியவர், “அவைகளுக்கு சிறகுக இருக்கா. இப்படி அசைக்குதா, அதனாலதான்” என்றார். “அப்போ இதுக்கில்லியே, ஆனா?” கைகளிளிருந்ததை காட்டினான். “இதுக்குள்ள […]

உலகப்பொதுமறை

நுண்கதை

வரிசையில் இன்னும் நான்கு நபர்கள் மட்டுமே பாக்கி. இரண்டு நாட்களாகக் குடித்த தண்ணீர் இப்பொழுது கசப்படித்தது. அவனிடமிருந்த உடைகளிலேயே சிறந்ததை அணிந்திருந்தான். சட்டையின் நைந்து போன அடிப்பகுதியை மறைக்கப் பேன்டினுள் செருகியிருந்தான். சினிமாதான் வாழ்க்கையென வந்தவனுக்குச் சில நாட்களாக ஆஞ்சநேயர்  உணவளித்துக்கொண்டிருந்தார். இன்று இயக்குனர் வரச்சொல்லியிருக்கிறார். எப்படியும் வாய்ப்புக் கிடைத்துவிடும் என்று ரமேஷ் கூறியிருந்தான். எட்டிப்பார்த்தான். வடையுடன் தயிர்சாதமும் கொடுக்கிறார்கள். டைரக்டர் ஆபிஸிற்குப்  போக, கையிலிருக்கும் காசில்  பாதி தூரம் பேருந்தில் செல்லலாம். பெண்ணாகப் பிறந்திருக்கலாம். “சீக்கிரம் […]

பேனா

நுண்கதை

அப்பெண்ணின் கைகளில் இருந்த எழுதுகோல் என்னை ஈர்த்தது. மெலிந்த பச்சை வர்ண உடலுக்குத் தங்க மூடி போட்டிருந்தது. வங்கியின் காசாளர் முகப்பை  நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் எனக்குமிடையே நான்கு பேர் நின்றிருந்தனர்.  எழுதக் கேட்பதற்குத் தயக்கம் தடுத்தது. இன்னும் இரண்டு நிமிடங்கள், அந்தப் பெண் வந்த வேலையை முடித்துக் கிளம்பிவிடுவாள். “ஏங்க மேடம்…”. எனது குரல் கேட்டிருக்குமா எனச்சந்தேகம் வந்தது. இளையவள், செவித்திறன் அதிகம் போலும், திரும்பினாள். “உங்க பேனாக் கிடைக்குமா? ஃபில் பண்ணனும்.” “இந்தாங்க அங்கிள்”, முன்னால் […]

பிம்பம்

நுண்கதை

அறை நெடுகிலும் முடிக்கற்றைகள் சிதறியிருந்தன. டிவியின் திரை உடைந்திருந்தது. படுக்கையின் விரிப்புகள் சுருங்கி மூலையில் ஒதுங்கியிருந்தன. நிர்மலாவிற்கென்று தேர்ந்தெடுத்து வாங்கியவை அவை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தவிர்ப்பதற்காக  நகத்தைக் கடித்தான்.  இரண்டு நாட்களில் திருமணம். இதுவரை அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அன்றைய காலை நிகழ்வு, முழுவதையும் அடியோடு சிதைத்திருந்தது. வாழ்நாள் எதிரியுடன் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தவளைப் பார்த்ததும் நிலைகுழைந்தான். உடனிருந்தவன் தொட்டதிற்கு அவள் மறுக்கவில்லை. மாலை வந்தவளிடம் விசாரித்ததில், ‘நீண்ட நாள் பழக்கம், உனக்காகவெல்லாம் விட முடியாது’ […]

மாவிலை

நுண்கதை

சூரபதுமனின் இறுதித்தலை ஒன்றுதான் பாக்கியுள்ளது. அதையும் பறிகொடுப்பதற்குக் கோவிலின் முன்பாக நட்டுவைத்திருந்த மாங்கொம்பின் பின்னால் மறைந்தான். முதலில் இருந்த கூட்டத்தைக் காட்டிலும், இப்பொழுது அதிகமாகவே உள்ளது. நடராசு தயாராக நின்றான். இந்த ஆண்டு எப்படியாவது ஒரு மாவிலையையாவது பறித்து விட வேண்டும் எனபதில் உறுதியாகயிருந்தான். அதை விட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகுமாம்; உடல்நலம் கிட்டுமாம். கந்தனின் அம்பிற்கு அரக்கன் மாண்டான். வழக்கம் போல் சண்டை ஆரம்பித்தது. கும்பலை விலக்கிக்கொண்டு வந்தவனின் சட்டையுடன் உதடும் கிழிந்திருந்தது. ஆனால் கையில் […]

காகிதப்படகு

நுண்கதை

மழை பெய்துகொண்டிருந்தது. செம்மண் நிலத்தில் விழும் நீர்த்துளிகள் தங்கள் நிறத்தை இழந்தன. ஜன்னலின் மீதமர்ந்து படித்துக்கொண்டிருந்த லதாவை நீர்க்குமிழிகள், “வா, வந்தெம்மை தொட்டு உடை” என்றழைப்பு விடுத்தன. மறுநாளையத் தேர்வு பயங்காட்டியது. மழைநீரில் விளையாடினால்  உடல் நலம் கெடும், திட்டு கிடைக்கும். சமையலறையை நோக்கினாள். அம்மா உணவைத் தயாரிப்பதில் மும்மரமாக இருந்தாள். வாயிற்படியைத் தாண்டினாள். தரையில் தரம்பிய மஞ்சள் பாவாடையின் ஓரங்கள் சிவந்தன. தோளிலிருந்த தாவணியால் முக்காடிட்டுக்கொண்டாள். தண்ணீர் முகத்தை நனைத்தது. அவள் வைத்திருந்த திலகத்தை அழிக்க […]

குருவிக்கூடு

நுண்கதை

கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றிலிருந்து எட்டிற்கும் இருபதிற்கும் மீண்டும் இரண்டிற்கும் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு அச்சத்தம் கவனத்தை ஈர்த்தது. பந்தல், குருவிக் குடும்பத்திற்கு உள்வாடகை விட்டிருந்தது. ஆங்கிலப் பாடத்திலிருந்த ராபின்தான் வாயிலில் கூடு கட்டியிருந்தது. சின்னஞ்சிறு அலகையும் வெள்ளைத் தலையையும் காட்டிக்கொண்டிருந்த அது அவ்வப்பொழுது ஆரஞ்சு உடலையும் வெளிப்படுத்தியது. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் பார்ப்பான். ஒருநாள் அக்குடம்பையின் இடைவெளியில் காயாம்பூ வர்ண முட்டையொன்று தென்பட்டது. நாமில்லாத பொழுதில் கடவுளின் இல்லத்திலிருந்து வாங்கி வந்திருக்குமென்று மகிழ்ச்சியடைந்தான். அன்று வீட்டிற்குள்ளிருந்து […]